மரணம் பற்றிய அச்ச உணர்வுகள்
இன்னும் எழுகிறது
உயிர்வலி பெருகி விழிகள் இருள்கிறது
எனக்குள் சூனியப் பெருவெளி நீண்டு
எனது பகல்கள் காணாமலே போயின
மொழிகளும் வாய்க்குள் அடைபட்டுப் போனது
குடிசை விளக்குகள் கண்ணை மூடும்போது
துப்பாக்கிகள் விழிப்படைந்து
மனித உடலங்கள் மீது வன்புணரும்
பிணங்கள் கருத்தரித்து
வன்முறையின் உச்சம் மீண்டும் மீண்டும்
பிறப்பெடுக்கிறது
மனித இறப்பின் மூலமே அரசர்களின் இருப்பு
உறுதியாக்கப்படுகிறது
யார்வேண்டுமானாலும் மக்களைக் கொன்று
அரசராகலாம்
இது அராஜக அரசர்கள் ஆட்சிபுரியும்
மரண பூமி