எனது அழகிய இரவுப் பொழுதுகளில்…

for%20poster%20tamil[1]

இரவுப் பொழுதுகளில்

எனது
அழகிய இரவுப் பொழுதுகளில்
கொடிய மிருகங்கள் வந்து போகின்றன….

எதிர்காலம் குறித்த தேசக் கனவுகளில்
அவை மேய்ந்துவிட்டுப் போகிறது

அவையிடம்
கண்கள் இல்லை
காதுகள் இல்லை
கூரிய பற்களும், நகங்களுமே இருந்தன
கூடவே கழுத்தில் கொல்லும் ஆயுதங்கள்; கொழுவியிருந்தன.

அவை
எனது ஆசைகளை, இலட்சியங்களை
சப்பித்துப்புகின்றன
என்னையே இரைமீட்டுகின்றன

தப்பித்துப் போகவிடாமல்
கபாலங்களாலும் முறிந்துபோன
எலும்புத் துண்டுகளாலும்
என்னைச் சுற்றி வேலிபோட்டு பயமுறுத்துகின்றன

இனி எல்லாப்; பொழுதுகளில்; இருந்து
மீண்டுபோக முடியாது போகும்

நன்றி : வீரகேசரி உயிர் எழுத்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: